தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வருவதாலும், மீண்டும் தங்களது பள்ளி நண்பர்களை கண்டதாலும், மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பள்ளிகளில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளியிலேயே மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு மற்றும் வங்கி கணக்கு தொடங்குதல் சிறப்பு முகாமிகளும் நடைபெற்றது.

தமிழ்நாடு

6/10/2024

My post content