ஈரோட்டில் மூப்பனாரின் 93 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய தமாகாவினர்.
ஈரோடு
8/19/2024
மறைந்த தலைவர் மூப்பனாரின் 93 வது பிறந்த நாளான இன்று, தமாகாவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.
மூப்பனாரின் 93 ஆவது பிறந்த நாளான இன்று அவரது பிறந்த நாளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பெருந்துறை சாலையில் உள்ள ஈரோடு மாநகர் மாவட்ட கட்சியின் அலுவலகத்தில், மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் தலைமையில் அக்கட்சியினர் மறைந்த தலைவர் மூப்பனார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் செங்கோடம்பள்ளம் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஈரோடு மாவட்ட மகளிர் அணி தலைவர் பி.விஜயா, வர்த்தகர் பிரிவு கொங்கு மண்டல தலைவர் பி.சி.சரவணகுமார், சிறுபான்மை பிரிவு தலைவர் எஸ்சிஎஸ்டி பிரிவு தலைவர் கண்ணம்மாள், மாவட்ட துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கே.பி.ரபிக் என்கின்ற ராஜேந்திரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.