ஈரோட்டில் அன்னபூரணி அரசம்மா பீடத்தின் ஆன்மீக பயிற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்னபூரணி அரசம்மன் பீடத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் சிறப்பு தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ஒருநாள் தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அன்னபூரணி அரசம்மா கலந்து கொண்டு மன அமைதி மற்றும் பேரானந்தம், பிரபஞ்ச சக்தியை உணர்தல், ஜீவன் முக்திக்கான எளிய வழி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஆகியவற்றிற்கான தியான வகுப்பு மற்றும் ஆன்மீக பயிற்சி வழங்கினார்.

ஈரோடு

My post content