ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த வட மாநில இளைஞர் கைது.

தமிழக அரசின் உத்தரவின் பெயரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்கு ரயில் மூலம் கஞ்சா விற்பனைக்காக கடத்தி வருவதாக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையம், பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் 10.5 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வீட்டில் இருந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சுசாந்தகுமாா் சகோ (32) என்பதும், அவா் ஒடிஸா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, பெருந்துறை பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும், சுசாந்தகுமாா் சகோவிடம் இருந்து 10.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு

6/12/2024

white concrete building
white concrete building

My post content