FATIA 26 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு, 12/08/2024. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின், 26 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் 26 ஆவது பொதுக்குழு கூட்டம், அச்சங்கத்தின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்… தமிழகத்தில் 6 சதவீதம் மின்கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும். ஈரோடு ரயில்வே நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் நேரத்தை அதிகரித்து கூடுதலாக 2 பிளாட்பார்ம் அமைக்க வேண்டும். ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் மேடு வரை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. பாலம் அமைப்பதற்கான பணிகளை விரைவில் துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு

8/12/2024