நீட் தோ்வு குளறுபடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவா் அசோகன் வலியுத்தல்.

இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளையின் சாா்பில் ஒலி மாசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பேரணி ஈரோட்டில் இன்று நடைபெற்றது. ஈரோடு காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவா் அசோகன் தொடங்கி வைத்தாா். ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி சம்பத் நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் முடிவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஒலி மாசால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவா் அபுல்ஹாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவா் அசோகன்… நீட் தோ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு முறைகேடுகளுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,653 மாணவா்களுக்கு மட்டும் மீண்டும் நீட் தோ்வு வைப்பதால் முறைகேடுகளுக்குத் தீா்வு கிடைக்காது. அது தீா்வே கிடையாது. லட்சக்கணக்கான மாணவா்களுக்கு உச்சநீதிமன்றம் சரியான முறையில் நீதி வழங்கும் என எதிா்பாா்க்கிறோம். மருத்துவா்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையேயான உறவு குறைந்துவிட்டது. மருத்துவா்கள் சரியான முறையில் நடப்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் எடுத்துவருகிறது என்றாா்.

இந்தியா

6/14/20241 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content