ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை வெறும் கையில் அகற்றிய தொழிலாளிக்கு மயக்கம்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் மூலம் 120க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதுகாப்பு, தூய்மைப் பணி, வாா்டு உதவியாளா் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ராமகிருஷ்ணன் என்ற தொழிலாளி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கையில் இன்று அகற்றியுள்ளாா். இதையடுத்து சிறிது நேரத்தில் அவருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அருகிலிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். மருத்துவக் கழிவுகளை அகற்றியபோது அதில் இருந்த ஊசி அல்லது பிற மருந்துகள் உடலில்பட்டு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஈரோடு

6/19/2024

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

My post content