அகில இந்திய கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் முதல் பரிசு.
தமிழ்நாடு
8/20/20241 min read
ஈரோடு, ஆகஸ்ட் 20.
கோவையில் 17-வது ஆசியன் கராத்தே அகாடமி நடத்திய இன்டர்நேஷனல் மெய்புகான்கோஜுரியு நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கட்டா குமித்தே, டீம் கட்டா, டீம் குமித்தே, ஓபன் கட்டா, ஓபன் குமித்தே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
மகாராஷ்டிரா தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றார்கள்.
இதில் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலர் பெல்ட் கட்டா பிரிவில் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியைச்சேர்ந்த கோகிலா செல்வராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி உதயகுமாரும் முதல்பரிசு தங்ககோப்பையை வென்றனர்.