அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
8/17/2024
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நீர்வளத் துறை சார்பில் 1916 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலம், பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து, நீரேற்று முறையில், 1065 கி.மீ. நீளத்திற்கு நிலத்தடி குழாய் அமைத்து, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு, 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவுத்திட்டமான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சி.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.