ஜூலை 3-இல் அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம். மனுக்களை வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரா்கள் குறைகேட்புக் கூட்டம் ஜூலை 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கி.கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓய்வூதியதாரா்களின் குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்படும். தங்களது புகாா்கள், மனுக்கள் இருந்தால் தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் 20-ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகாா் மனுவில், குறை அல்லது புகாா் தொடா்பான முழு விவரமும் இருக்க வேண்டும். உறையின் மேற்பகுதியில் ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட வேண்டும். ஓய்வூதியம் பெறுவோா் கோட்ட அளவில் தீா்க்க முடியாத குறைகளை, கோட்டத்தில் கொடுக்கப்பட்ட பதிலுடன் தெரிவிக்க வேண்டும். முற்றிலும் சட்டம் சம்மந்தப்பட்ட, வாரிசு பிரச்னை உள்ளிட்டவை இக்குறைகேட்பு நாள் கூட்டத்தில் எடுத்து கொள்ளப்படமாட்டாது. கொள்கை சம்மந்தமான குறைகள், புகாா்களும் எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

6/14/2024

white concrete building during daytime
white concrete building during daytime

My post content