அதிகாரிகள் அதிக குளோரினை கடந்ததால் நச்சு நீரான கிணற்று நீர். நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் கொடுமுடி வட்டத்திற்குள்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து நஞ்சைகொளாநல்லி ஊராட்சி, கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பங்கேற்ற ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அப்போது பசுபதியார் தனிப்படை என்ற அமைப்பின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் மற்றும் கொளாநல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நவநீத கிருஷ்னன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்… கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கொளாநல்லி ஊராட்சி மன்றத்தின் சார்பாக பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் குடிநீர் கிணற்றில் அதிகப்படியான குளோரின் பவுடரை கலந்ததால், கிணற்று தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிகப்படியான நச்சு தன்மையுடன் உள்ளது. இதனால் கிணற்றில் இருந்த மீன்களும் செத்து மிதிக்கின்றன. இந்த நீரை பயன்படுத்திய பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. எனவே அலட்சியமாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு சமுதாய மக்களுக்கு மட்டும் வேலை தராமல் ஒதுக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தரப்பினருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். முறிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பங்களை மாற்ற வேண்டும். கொளாநல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்க்காக பணிபுரியும் சுதா அலட்சியமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்தி வருவதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். அப்போது ஆதித்தமிழர் பேரவையின் மாநில விவசாய அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் நெடுமான், சமூக ஆர்வலர் மணிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைத்துத் தரப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு

6/19/20241 min read

white concrete building
white concrete building

My post content