பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு, ஆகஸ்ட் 15. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்கால், அரக்கன் கோட்டை – தரப்பள்ளி, காலிங்கராயன் கால்வாய் ஆகியவைகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அணையில் தண்ணீர் இருப்பு உள்ளதை பொறுத்து பாசனங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 85 அடிக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்ததாலும், தென்மேற்கு பருவ மழை பெய்ய உள்ளதாலும், அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று வழக்கம்போல் தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தமிழ்நாடு

8/15/2024