ஈரோட்டில் தமாக உறுப்பினர் சேர்க்கை துவக்கம்.

ஈரோடு, 12-08-2024. ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 2024 - 27 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா, அக்கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணைத்தலைவர் விடியல் சேகர் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா, உயர்மட்ட ஆலோசனைகள் உறுப்பினர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

8/12/2024