ஈரோடு புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவடைவதால் புத்தகங்களை வாங்க அலைபோதும் மக்கள் கூட்டம்.

ஈரோடு, ஆகஸ்ட் 12. ஈரோடு புத்தகத் திருவிழா நாளையுடன் (ஆகஸ்ட்13) நிறைவடைய உள்ளதால், வாசகர்களால் நிரம்பி வழியும் புத்தக அரங்குகள். கடந்த 8 நாட்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை. ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கி, வரும் 13- ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவடைய உள்ளதால் புத்தக ஆா்வலா்களின் கூட்டத்தால் அரங்குகள் நிரம்பி வழிந்தன. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான தலைப்புகளில், புத்தகங்கள் கிடைப்பதால், கடந்த 8 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகா்கள் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்டு புத்தகம் வாங்கியுள்ளனா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வாசகா்களின் வருகை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

8/12/2024