பாஜக, நாளை முதல் 2026 தேர்தலுக்கான வேலையை திருப்பூரிலிருந்து ஆரம்பிப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு, ஆகஸ்ட் 10. ஈரோடு மாவட்டம் சேனாதிபதி பாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் வருங்கால தலைமுறையினரின் தொழில் முனைவோருக்கான கூட்டம்* நடைபெற்றது. இதில் பாஜக தமிழக மாநில தலைவரும், வீ தி லீடர்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான அண்ணாமலை கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை… தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பின் தங்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் GST 11% குறைந்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித பிரச்சனையையும் செய்யாமல், தமிழக அரசு அடிப்படை வசதிகளை செய்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். தமிழக தொழில் நிறுவனங்கள் மத்திய பிரதேசத்திற்கு செல்வதால் மத்தியபிரதேச முதல்வர் நிகழ்ச்சிக்கு கனத்த இதயத்தோடு போகவில்லை. நாளை முதல் 2026 தேர்தலுக்கான வேலையை திருப்பூரிலிருந்து ஆரம்பிக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக இருக்கிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக 20 ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் உறுதியாக நடக்கும். திறப்பு தேதியை அறிவித்தால் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய தயார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும். இதில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க போகிறோம். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி குறித்து, முதல்வர் ஸ்டாலினே பழுக்கவில்லை என சொல்லியுள்ளார் என தெரிவித்தார்.
தமிழ்நாடு
8/10/2024