ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் ஏராளமான மாடுகள் விற்பனை.

ஈரோடு, ஆகஸ்ட் 08. ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் ஏராளமான மாடுகள் விற்பனை. விற்பனைக்கு மாடுகளை கொண்டு வந்த வியாபாரிகள் மகிழ்ச்சி. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வியாழன் தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இன்று நடைபெற்ற சந்தையில் ஈரோடு, கோவை, கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 780 பசுமாடுகள், 460 எருமை மாடுகள் என மொத்தம் 1240 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று 48 ஆயிரம் ரூபாய் முதல் 81 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடு 36 ஆயிரம் ரூபாய் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சென்றனர். வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால், விற்பனைக்கு வந்த மாடுகளில் 85% மாடுகள் விற்பனையானதால், விற்பனைக்கு மாடுகளை கொண்டு வந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு

8/8/2024