மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 740 மனுக்கள் குவிந்தது.

ஈரோடு, ஆகஸ்ட் 07. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து 740 மனுக்கள் குவிந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் குலவிளக்கு, விளக்கேத்தி, காகம், பழமங்கலம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்களுக்கான ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா். முகாமில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மின்சார வாரியம், காவல் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்தனா். இதில், பொது மக்களிடம் இருந்து சுமாா் 740 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு

8/7/2024