ஈரோட்டில் கைத்தறி துணி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை.

ஈரோடு, ஆகஸ்ட் 7. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் 20% தள்ளுபடி விலையில் சிறப்பு கைத்தறி துணி கண்காட்சி மற்றும் விற்பனை, இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில், கைத்தறி துறை சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி துணி கண்காட்சி மற்றும் தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா துவங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் படுக்கை விரிப்பு, தலையணை உரை, போர்வை, துண்டு, காட்டன் சேலை, மென்பட்டு சேலை, திரை சீலை, மேட் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற புகழ்பெற்ற பவானி ஜமக்காலம் உள்ளிட்டவைகள், 20% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

8/7/2024