புதிதாக பொறுப்பேற்ற ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விசிகவினர் டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் கோரிக்கை.

ஈரோடு, ஆகஸ்ட் 06. ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் குணசேகரன் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் டாஸ்மாக் மாவட்ட அமைப்பாளர் மாரிமுத்து தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் விசிகவின் ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் கலந்துகொண்டு டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி தருவதாக மேலாளர் குணசேகரன் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் குமார், வே.மதிவாணன், நாமக்கல் மாவட்ட பொருப்பாளர் அசோக் குமார், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் உதயவளவன், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் என்.பழனிவேலு, மாவட்டத் துணைச் செயலாளர் சிவக்குமார், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

8/6/2024