விஜயின் கட்சியான தவெக வின் மாநில மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைமை கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஈரோடு காவிரி சாலையில் உள்ள இந்த அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் திறந்து வைத்தார். அங்கு சுமாா் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதேபோல சூளை பகுதியில் கட்சிப் பெயா் பலகையைத் திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னர் வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் எம்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்த புஸ்ஸி என்.ஆனந்த்… தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருகட்டமாக மாவட்ட அளவில் கட்சி தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈரோட்டில் கட்சித் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எங்களின் இலக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தல் என்று கட்சி தொடங்கும்போதே எங்கள் தலைவா் தெளிவாக குறிப்பிட்டுள்ளாா். தோ்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. தோ்தலில் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் கட்சியின் தலைவா் அறிவிப்பாா். கட்சியில் இதுவரை பல லட்சம் போ் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். தொடா்ந்து உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்பதை கட்சித் தலைவா் அறிவிப்பாா். நாங்கள் 30 ஆண்டுகளாக தொடா்ந்து மக்கள் சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான பதில் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தெரியும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு

6/14/2024

white concrete building during daytime
white concrete building during daytime

My post content